"மாற்றுத் திறனாளி மாணவர்களை  சாதனையாளர்களாக மாற்ற வேண்டும்'

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் மாற்றுத் திறனாளி மாணவர்களை சாதனையாளர்களாக 

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் மாற்றுத் திறனாளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்ற வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு எளிதாக பாடப் பொருளை புரிந்து கொள்ளும் வகையில் பயிற்றுநர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி. மகேஸ்வரி பேசியது:  ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரையில் பயிலும் பார்வைக் குறைபாடு, செவித்திறன்,   மனவளர்ச்சி,  உடலியக்கம்,  மூளை வளர்ச்சி குறைபாடு மற்றும் ஆட்டிசம் குறைபாடுகளுடைய மாற்றுத்திறன் குழுந்தைகளுக்கு எளிதாக பாடப் பொருளை புரிந்து கொள்ளும் வகையில் பாடம் நடத்திட இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 
இந்த பயிற்சியைக் கொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களை சாதனையாளற்களாக மாற்றவேண்டும். அதற்கான முயற்சியைப் பயிற்றுநர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார். முகாமில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், உதவித் திட்ட அலுவலர் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com