திருப்பதிக்கு செல்லும் பேருந்து வழித்தடம் மாற்றம்: திமுக கண்டனம்

கிருஷ்ணகிரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து ஒசூருக்கு மாற்றப்பட்டதற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து ஒசூருக்கு மாற்றப்பட்டதற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கிருஷ்ணகிரி அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் கிருஷ்ணகிரி போக்குவரத்து பணிமனையிலிருந்து சுமார் 75 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 4 பேருந்துகள் கிருஷ்ணகிரி முதல் திருப்பதி வரை நீண்டகாலமாக இயக்கப்பட்டு வந்தன.
5 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்டு வந்த  இப் பேருந்துகள் தருமபுரி, சேலம் பணிமனைகளுக்கு மாற்றப்பட்டது. பின்னர், திமுக எடுத்த தொடர் முயற்சியால் கிருஷ்ணகிரி மக்களின் நலன் கருதி மீண்டும் காலை 7.15 மணிக்கு ஒரு பேருந்து மட்டும் கிருஷ்ணகிரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த பேருந்து வழிதடத்தை ஒசூரிலிருந்து இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதனால், கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, மீண்டும் கிருஷ்ணகிரியிலிருந்து திருப்பதிக்கு பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்காவிடில் பேருந்தை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com