ரூ. 120 கோடிக்கு சிறுசேமிப்பு இலக்கு நிர்ணயம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2017-2018-ஆம் நிதியாண்டில் ரூ. 120 கோடி சிறுசேமிப்பு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2017-2018-ஆம் நிதியாண்டில் ரூ. 120 கோடி சிறுசேமிப்பு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற உலக சிக்கன நாள் விழாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்து பேசியது:
பொதுமக்கள், மாணவர்கள் தங்களது சிறுசேமிப்பை வீட்டிலே வைக்காமல், வங்கியிலோ அல்லது, தபால் நிலையத்திலோ வைப்புத் தொகையாக வைத்தால் வட்டி கிடைக்கும்.
அஞ்சல் துறை முகவர்கள், சேமிப்புத் திட்டங்களை பொதுமக்களிடம் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2016-2017-ஆம் நிதியாண்டில் ரூ. 93.31 கோடி மதிப்பிலான சேமிப்பு இலக்கு எட்டப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் இலக்கான ரூ.120 கோடியை எட்ட சிறுசேமிப்பு முகவர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
சிறந்த சிறுசேமிப்பு முகவர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ்களை அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ். ராஜசேகரன், மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் எஸ். சுப்பாராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com