அதியமான் மகளிர் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஒருநாள் பயிற்சிப்பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஒருநாள் பயிற்சிப்பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.
இயற்பியல் துறைத் தலைவி முனைவர்.ஜே. குளோரி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் ஜெயந்தி, கோமதி மற்றும் முனைவர் ரேகா ஆகியோர் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர். தி. ரா. கணேசன் சிறப்புரையாற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.
அதியமான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் சீனி. கணபதிராமன் மற்றும் அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஜே.மே. ஷோபா ஆகியோர் வாழ்த்தினர்.
அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் தலைமை வகித்தார். பயிலரங்கத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகப் படிக வளர்ச்சி மையத்தின் இயக்குநர் முனைவர் எஸ். நாராயணகல்குரா படிக உயிரியல் பற்றியும், உடலில் உள்ள நேனோ படிகங்களின் விகிதம் மற்றும் அமைப்பு ஆகியவற்றை மாணவிகளிடையே பேசினர்.
இதைத் தொடந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகப் படிக வளர்ச்சி மையத்தின் இயக்குநர் முனைவர் எஸ். மூர்த்திபாபு நேனோ படிகங்களை உருவாக்கும் பல்வேறு விதிமுறைகளை தகவல் ஒளிபரப்பல் கருவி மூலம் விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும் நெல்லூர் சடீமுசு அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் ஆர். ராதாகிருஷ்ணா நேனோ தொழில்நுட்பத்தின் அவசியம்  பற்றி கலந்துரையாடினார். இயற்பியல் துறை உதவிப்பேராசிரியை சத்யா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com