கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் வட மாநிலத்தினர் ஹோலி பண்டிகையை வெள்ளிக்கிழமை உற்சாகமாக கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் வட மாநிலத்தினர் ஹோலி பண்டிகையை வெள்ளிக்கிழமை உற்சாகமாக கொண்டாடினர்.
வட மாநிலத்திவர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது ஹோலி பண்டிகையும் ஒன்றாகும். வண்ணங்களை மையமாகக் கொண்டு கொண்டாடப்படும் இந்த பண்டிகையின் போது, இளைஞர்கள், முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் பல வண்ணப் பொடிகளை முகத்தில் பூசியும், வண்ண நீர்களை ஒருவர் மீது ஒருவர் தெளித்தும் உற்சாகமாக விளையாடி மகிழ்வர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர், காவேரிப்பட்டணம், பர்கூர், ஜெகதேவி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் வட மாநிலத்தினர் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com