கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரியில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரி, மே 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வியாழக்கிழமை கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கோட்டத் தலைவர் ராமமூர்த்தி, செயலர் மணி ஆகியோர் தலைமை வகித்தனர். கிராமபுற ஊழியர் சங்கத்தின் கோட்டச் செயலர் பாதுஷா, அஞ்சல் ஊழியர் சங்கத்தின் கோட்டச் செயலர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 263 தபால் நிலையங்களில் பணியாற்றும் 573 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com