கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான பெங்களூரு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 643 கன அடியாக இருந்தது. இது மேலும் அதிகரித்து சனிக்கிழமை விநாடிக்கு 832 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 753 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 41.65 அடியாக இருந்தது.
மழையளவு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரையில் பெய்த மழை அளவு (மி.மீ.):- ஒசூர்-47, தேன்கனிக்கோட்டை 40, தளி- 40, அஞ்செட்டி - 30.4, சூளகிரி - 23, பாரூர் - 16.6, பெனுகொண்டாபுரம் - 16.2, நெடுங்கல் - 16.2, கிருஷ்ணகிரி - 15.4, போச்சம்பள்ளி - 14.2, ராயக்கோட்டை - 11, ஊத்தங்கரை - 5.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com