குழந்தைகளின் உரிமைகள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடக்கம்

கிருஷ்ணகிரியில் "என் நண்பன் குழந்தைகளின் உரிமைகள்' என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் "என் நண்பன் குழந்தைகளின் உரிமைகள்' என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சைல்டு லைன்-1098 சார்பில் என் நண்பன் குழந்தைகளின் உரிமைகள் - குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர் தொடக்கி வைத்தார். மேலும், பள்ளி குழந்தைகள் மாவட்ட ஆட்சியருக்கு ரக்ஷாபந்தன் கயிறுகளைக் கட்டினர். 
நிகழ்ச்சியில் குழந்தைகள் பங்கேற்று குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்துவேன், அவசரக் காலத்தில் உதவி தேவைப்படும் நிலையில் 1098 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்வேன் என உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் சரவணன், வின்சென்ட் சுந்தர்ராஜன், சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன குமாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com