கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் கிராமிய ஆடல் கலைப் பயிற்சி

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கிராமிய நாட்டுப்புற ஆடல்கலை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கிராமிய நாட்டுப்புற ஆடல்கலை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் திருவையாறு தமிழ் ஐயர் கல்விக்கழகம், அவ்வை அறக்கட்டளை இணைந்து தமிழக நாட்டுப்புற ஆடல்கலைகளான கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம் குறித்து பயிற்சி அளித்தது.
கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் துறைத் தலைவர் சௌ.கீதா, திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழக இயக்குநர் கலைவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், அனைத்துத் துறைகளைச் சேர்ந்த 100 மாணவிகளுக்கு ஆடல்கலை பயிற்சி அளிக்கப்பட்டன. 
மேலும், நாட்டுப்புற ஆடல்கலைத் திலகம் என்ற விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டன. சிறந்த மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. தமிழ்த் துறைத் தலைவர் சௌ.கீதாவுக்கு கலைச்செம்மல் விருது வழங்கப்பட்டன. 
தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் சிவகாமி, மாணவிகள் உள்ளிட்டோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com