தபால் தலை கண்காட்சி

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தபால் தலை கண்காட்சியை 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்.

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தபால் தலை கண்காட்சியை 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்.
கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தேசிய அஞ்சல் வார விழா அக். 9 முதல் 15-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதையொட்டி, தபால் தலை கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுப்பாராவ் தொடங்கி வைத்தார்.
இதில், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற துணைப் பதிவாளர் ஜெயசந்திரன் (80), கடந்த 60 ஆண்டுகளாக சேகரித்து வைத்துள்ள தபால் தலைகளை பார்வைக்கு வைத்திருந்தார். 
மேலும், 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட தபால் தலைகள், சிறப்பு வெள்ளி நாணயங்கள், கதர் துணியால் செய்யப்பட்ட அஞ்சல் தலை, தங்க அஞ்சல் தலை, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய, அயல்நாட்டு தபால் தலைகள், சிறப்பு தபால் உறைகள், தபால் அட்டைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, வெள்ளியால் ஆன ஆயிரம் ரூபாய் நோட்டு, உலகில் முதன் முறையாக கதர் துணியால் அச்சடிக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை, உலகின் மிகச் சிறிய குரான் ஆகியவையும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. 
கண்காட்சியை, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் 500-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.
அக். 13-ஆம் தேதி, வணிக முன்னேற்ற தினத்தையொட்டி, வணிகர்களுக்கு அஞ்சல் துறையில் உள்ள சேவை பணி குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com