துபையில் கட்டுமான நிறுவனப் பணிக்கு தஞ்சாவூரில் நாளை நேர்காணல்

துபையில் கட்டுமான நிறுவனத்தில் வேலை வேண்டுவோர் தஞ்சாவூரில் அக். 14-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்

துபையில் கட்டுமான நிறுவனத்தில் வேலை வேண்டுவோர் தஞ்சாவூரில் அக். 14-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் முதற்கட்ட நேர்காணலில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரி சங்கர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுனீல்பாலீவால் தெரிவித்துள்ள
தகவல் படி, துபையிலுள்ள கட்டுமான நிறுவனத்துக்கு இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன் 27 முதல் 45 வயது வரையுள்ள கொத்தனார்கள், ஆபரேட்டர்கள், தச்சர்கள், போர்மென்கள் தேவைப்படுகிறார்கள்.
வேலை சம்பந்தப்பட்ட விவரங்கள் ‌w‌w‌w.‌o‌m​c‌m​a‌n‌p‌o‌w‌e‌r.​c‌o‌m என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். கொத்தனார், ஆபரேட்டர், தச்சர்களுக்கு மாதம் ரூ.23 ஆயிரம் மற்றும் மிகை நேர பணி ஊதியம் ரூ.38 ஆயிரம் வழங்கப்படும். 
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் கூடுதல் ஊதியம், இலவச இருப்பிடம், அந்த நாட்டின் சட்டத் திட்டத்துக்குள்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்.  
கொத்தனார், ஆபரேட்டர் மற்றும் தச்சர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது இசிஎன்ஆர் பாஸ்போட் வைத்திருந்தல் வேண்டும். போர்மென் வேலைக்கு பட்ட படிப்பு (டிப்ளமோ) தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், உரிய தகுதி மற்றும் விருப்பமிருப்பின், தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி அனுபவம், செல்லத்தக்க கடவுச் சீட்டு, இரண்டு புகைப்படத்துடன் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக். 14-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் முதற்கட்ட நேர்காணலில் பங்கேற்கலாம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com