பாசன திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்திஅக்.30-இல் விவசாயிகள் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்று நீரைக் கொண்டு பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றி, போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். தமிழக விவசா

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்று நீரைக் கொண்டு பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றி, போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம், கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்றது. அச் சங்கத்தின் மாவட்ட ஆலோசகர் நசீர் அகமது தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் கே.எம்.ராமகவுண்டர், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக 81 கி.மீ. பாயும் தென்பெண்ணை ஆற்று நீரைக் கொண்டு புதிய திட்டங்கள் ஏதும் நிறைவேற்றவில்லை. ஆனால், வேலூர், தருமபுரி மாவட்டங்களின் விவசாயிகளின் நலன் கருதி திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கருப்பு கொடி ஏற்றி அக்.30-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com