உலக தாய்ப் பால் வார விழா விழிப்புணர்வு

பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்ப் பால் வார விழாவைத் தொடர்ந்து தாய்ப் பால் புகட்டுவதன் அவசியம் மற்றும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்ப் பால் வார விழாவைத் தொடர்ந்து தாய்ப் பால் புகட்டுவதன் அவசியம் மற்றும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
 பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். தங்கம் மருத்துவமனை மருத்துவர் எம்.மல்லிகா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ஆங்கில இலக்கியத் துறை மாணவி டி.கவிதா அனைவரையும் வரவேற்றார்.
 இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகப் பங்கு பெற்ற தங்கம் மருத்துவமனை மருத்துவர் எம்.மல்லிகா தாய்ப் பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகளையும், கொடுக்கும் முறை பற்றியும், தாய்ப் பாலின் மகத்துவத்தையும் எடுத்துரைத்தார். மேலும், சரியான வயது வரை தாய்ப் பால் பருகும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த குழந்தைகளாகவும், எதிர்ப்பு சக்தி மிக்கவர்களாகவும் திகழுவர்.
 மேலும் 2030-க்குள் அனைவரும் குழந்தைகளுக்கு தாய்ப் பால் கொடுப்பதின் முக்கியத்துவத்தை உணர்ந்து வளரும் குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு அடித்தளமிட வேண்டும் என்பதே உலக தாய்ப் பால் வார விழாவின் முக்கிய இலக்காகும் என்றார்.
 தொடர்ந்து மருத்துவர் அபிநயா மதன்குமார் ஸ்டெம் செல்லின் மகத்துவம் பற்றி எடுத்துரைத்தார். பின்னர், மருத்துவர் தீப்தி மிஸ்ரா, மார்பக புற்றுநோய் பற்றியும், அந்நோய் வராமல் இருப்பதற்குரிய வழிமுறைகளையும் கூறினார். மேலும், உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை சரி விகிதத்தில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
 பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் பேசுகையில், பெண்கள் உடற்கூறுகளை பற்றிய தெளிவு இருந்தால் மன அமைதி பெற்று சமுதாயத்தில் சிறந்து விளங்க முடியும் என்றார். நாமக்கல் இன்னர்வீல் சங்கத்தின் தலைவி மாலதி பாரிவள்ளல், பொது உடற்கூறு அமைப்பினை பற்றி விளக்கினார். தொடர்ந்து, மாணவியர் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் எஸ்.முத்துமீனாக்ஷி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com