டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு: சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

திருச்செங்கோட்டில் பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

திருச்செங்கோட்டில் பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
 கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.விஜயபாஸ்கர், மின்சாரம் மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வி.சரோஜா, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதார உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசும் போது, தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வராமல் இருப்பதற்காக தமிழக முதல்வர் கூடுதல் நிதியினை ஒதுக்கி மக்களுக்காக சுகாதாரத் துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை நாடி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் மருத்துவ கண்காணிப்புக் குழுக்கள்,விரைவுக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
 மக்கள் சாதாரண காய்ச்சலை டெங்கு என்று நினைத்து பயந்து கொள்கின்றனர். தமிழகத்துக்கு வரும் வெளிமாநில நபர்களால் டெங்கு மற்றும் பிற காய்ச்சல்கள் பரவுகின்றன. எனவே, அதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொண்டால் டெங்கு பரவாமல் காத்துக் கொள்ளலாம்.
 சுகாதாரமற்ற பகுதிகளில் கிடக்கும் தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள் போன்றவற்றில் தேங்கும் நீரினால் டெங்கு கொசுக்கள் உருவாகும். எனவே, தண்ணீர் தேங்காமல் சுற்றுபுறத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
 சுகாதார அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். மாணவியரின் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்புக் குழு வாகனங்கள்,கொசுப்புழுக்களை அழிக்கும் பணியாளர்கள் ஊர்வலம், டெங்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனையினை ஆய்வு செய்தார்.
 நிகழ்ச்சியில் திருச்செங்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பொன்.சரஸ்வதி, சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரசேகரன், நகராட்சி ஆணையர் அச்சையா, மாவட்ட மருத்துவ அலுவலர்கள்,சுகாதார அலுவலர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், நடமாடும் மருத்துவக் குழுக்கள்,காய்ச்சல் தடுப்புக் குழுக்கள், சுகாதாரக் குழுவினர், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், நகராட்சி துப்புரவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com