டெங்கு காய்ச்சல் பாதிப்பு:  குமாரபாளையத்தில் பிளஸ் 2 மாணவி பலி

டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
 நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், குப்பாண்டம்பாளையம் அருகே குளத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த செல்வம்-மணி தம்பதியரின் மகள் மகேஸ்வரி(17). இவர் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
 மகேஸ்வரி கடந்த 7 நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனை, ஈரோடு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தார். உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் 2 நாள்களுக்கு முன்பு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.
 நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 20 நாள்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அசாதாரண சூழ்நிலையிலும் பள்ளிகளில் டெங்கு தடுப்புக்கான நிலவேம்பு கஷாயம் வழங்க மாவட்ட நிர்வாகம், கல்வித் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 வரும் 16 ஆம் தேதி பள்ளிகள் திறந்தவுடன் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நில வேம்பு கஷாயம் வழங்க கல்வித் துறை நடவடிக்கையெடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com