ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை

ஊதிய உயர்வு ஒப்பந்தந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊதிய உயர்வு ஒப்பந்தந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க(ஏஐடியுசி) 30ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடந்தது.
 மாநில பொதுச் செயலர் டி.எம்.மூர்த்தி தலைமை வகித்தார். சம்மேளன பொதுச் செயலர் ஜெ.லட்சுமணன், முற்போக்கு பேரவை மாநில தலைவர் என்.தம்பிராஜா, தொழிலாளர் சம்மேளன செயலர் நா.முருகராஜ் ஆகியோர் பேசினர்.
 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி அமல்படுத்த வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அரசும், நிர்வாகமும் உடனடியாக பேசி முடிக்க வேண்டும். 7ஆது ஊதியக் குழு பரிந்துரைகளை அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 வரவு, செலவு பற்றாக்குறையை அரசே வழங்க வேண்டும்.
 போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் செலவினத் தொகையை மற்ற மாநிலங்களைப் போல், அரசே வழங்க வேண்டும். 240 நாட்கள் பணி செய்து முடித்த அனைத்து தொழிலாளர்களையும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
 கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பின் பணியில் சேர்ந்த அனைவரையும், ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்திட வேண்டும். ஓய்வூதியத் திட்டத்தை அரசே பொறுப்பேற்று செயல்படுத்த வேண்டும்.
 பதவி உயர்வை விருப்பு வெறுப்பின்றி, பாகுபாடின்றி உரிய காலத்தில் வழங்க வேண்டும். காலாவதியான பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகள் இயக்க வேண்டும். பேருந்துகளுக்கு தேவையான உதிரி பாகங்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com