தனியார் ஆலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு: கிராம மக்கள் மறியல் போராட்டம்

தனியார் ஆலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகக் கூறி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் ஆலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகக் கூறி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், போடிநாயக்கன்பட்டி அருகே கரியபெருமாள்புதூர் கிராமத்தில் தேங்காய் தொட்டிகளை எரித்து, அதில் இருந்து கிடைக்கக் கூடிய மூலப்பொருள்களைப் பயன்படுத்தி சாம்பிராணி, ஊதுபத்தி போன்ற பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
 இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசு அடையும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த ஆலை செயல்படத் தடை விதிக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இக் கோரிக்கையை வலியுறுத்தி அப் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் காலை 8.30 மணிக்கு சேந்தமங்கலம்-அலங்காநத்தம் சாலையில் வெள்ளிக்கிழமை காலை திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த எருமப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் நாமக்கல்-துறையூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com