நெருங்கும் வடகிழக்குப் பருவ மழை: மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் கவனம் செலுத்துமா அரசு?

வடகிழக்குப் பருவ மழை தொடங்க இன்னும் 45 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் வீணாகும் மழைநீரை சேமிக்க மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகளை பலப்படுத்தவும்,
நெருங்கும் வடகிழக்குப் பருவ மழை: மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் கவனம் செலுத்துமா அரசு?

வடகிழக்குப் பருவ மழை தொடங்க இன்னும் 45 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் வீணாகும் மழைநீரை சேமிக்க மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகளை பலப்படுத்தவும், விவசாய நிலங்களில் பண்ணைக் குட்டைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களிலும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைக்கு முக்கிய காரணம் மழைநீர் சேமிப்பு இல்லாததுதான்.

நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர்த் தட்டுப்பாடு ஓரளவு சமாளிக்கப்படுகிறது. காவிரி கரையோர கிராமங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 100 அடி ஆழத்தில் கிடைத்த தண்ணீர், தற்போது 1,000 அடி ஆழ்துளை அமைத்தால்தான் கிடைக்கும் நிலை உள்ளது. இந்நிலை நீடித்தால் இன்னும் 15 ஆண்டுகளில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். அரசு ஏற்கனவே கொண்டு வந்த மழைநீர் திட்டமும் தற்போது முழுமையாகச் செயல்படவில்லை.

மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைப்பதில் ஆர்வம் குறைந்து, பல இடங்களில் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட தொட்டிகள், குழாய்கள் காணாமல் போய்விட்டன.

குடிநீர் தட்டுப்பாட்டால் தண்ணீரை விலைக்கு வாங்கும் மக்களும் மழைநீர் சேமிப்பின் அவசியத்தை உணரவில்லை.

இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த கல்வியாளர் ஆர்.பிரணவகுமார் கூறியது:
 நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நிகழாண்டு அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதற்கேற்ப கடந்த 10 நாள்களாக மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மேலும் நாமக்கல் மாவட்டத்திற்கு அதிக மழைப் பொழிவை தரக்கூடிய வடகிழக்குப் பருவ மழை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

கரை புரண்டோடும் மழைநீர், எந்தப் பயன்பாடும் இல்லாமல் வீணாக வெளியேறி வருகிறது. இதனை ஏரி, குளங்களில் நிரப்புவதற்கு அனைவரும் ஒன்றுகூட வேண்டிய பொறுப்பு உள்ளது. முதலில் நீர்நிலைகளை முடிந்த அளவு சுத்தம் செய்து, கால்வாய்களை சீர்செய்து, மழைநீரை தேக்கி வைக்க வேண்டும். சமூக ஆர்வலர்கள், இளைஞர்களை ஒன்று திரட்டி பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இந்தப் பணியை செய்ய வேண்டும். விவசாய நிலங்களில் பண்ணை குட்டை அமைத்து மழைநீரை சேமிக்க விவசாயிகள் முன்வரவேண்டும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com