விவேகானந்தா மகளிர் கல்லூரியில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

திருச்செங்கோட்டில் அமைந்துள்ள விவேகானந்தா மகளிர் கல்லூரியில் எதிர்காலத்திற்காக மாணவிகள் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்வதற்கான நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோட்டில் அமைந்துள்ள விவேகானந்தா மகளிர் கல்லூரியில் எதிர்காலத்திற்காக மாணவிகள் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்வதற்கான நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 விழாவிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தாளாளர் மற்றும் செயலர் மு. கருணாநிதி தலைமை தாங்கினார். தலைவர் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். நிர்வாக இயக்குநர் அர்த்தனாரீஸ்வரன், இயக்குநர் டாக்டர். ஸ்ரீராகநிதி அர்த்தனாரீஸ்வரன், அறங்காவலர் கிருபாநிதி கருணாநிதி, நிர்வாக அதிகாரி சொக்கலிங்கம், சேர்க்கை அதிகாரி வரதராஜன், முதல்வர் மங்கள இதய ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கோவை அரசுக் கலை கல்லூரி பேராசிரியர் கனகராஜ் கலந்து கொண்டார்.
 பேராசிரியர் கனகராஜ் தனது உரையில்," மாணவிகள் விவேகானந்தர் காட்டிய வழிப்பாதையில் நடந்து அவர் சொற்படி கற்றுத் தேற வேண்டும். மாணவிகள் சுயமாக யோசித்து முடிவெடுக்கும் திறனை வளர்க்க வேண்டும். மாணவிகள் தங்கள் எதிர்காலத்தை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். திட்டமிடுதல் மூலம் மாணவிகள் திறன் மேம்படுதல் மேலும் அவர்கள் அறிவும் மேம்படும்'' என்று கூறினார்.
 மாணவிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு எவ்வாறு பயிற்சி எடுக்க வேண்டும் என்ற விளக்கவுரையை அளித்தார். விழாவில் 3,600 க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com