டிச.17-இல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா

நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வரும் 17-ஆம் தேதி ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வரும் 17-ஆம் தேதி ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
நாமக்கல் கோட்டையில் புரான சிறப்பு பெற்ற ஸ்ரீஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் உருவான 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஸ்ரீஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். நிகழாண்டு வரும் 17-ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. 
விழாவை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற உள்ளது. 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 1 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெறும். மாலை 4 மணிக்கு புதிய முத்தங்கி அலங்காரம் நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் வெங்கடேஷ், கோயில் செயல் அலுவலர் ரமேஷ் செய்துள்ளனர்.
ஆழ்துளைக் கிணறு மூலம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com