அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்லில் 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு இளநிலை உதவியாளர் ஊதியமும், உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் ஊதியமும் வழங்கிட வேண்டும். முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் துளசிமணி தலைமை வகித்தார். செயலாளர் ஜெயக்கொடி முன்னிலை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ரா.முருகேசன், தலைவர் கு.ராஜேந்திர பிரசாத், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலர் பி.நடேசன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலர் என்.வேலுசாமி ஆகியோர் பேசினர்.
 ஆர்ப்பாட்டத்தின் போது அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு 1.1.2016 முதல் ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மே மாதம் கோடை விடுமுறை மற்றும் பறிக்கப்பட்ட சனிக்கிழமை விடுமுறை ஆகியவற்றை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கம் எழுப்பபட்டது. மாவட்ட துணைத் தலைவர் கலா நன்றி கூறினார்.
 திருச்செங்கோட்டில்...
 திருச்செங்கோட்டில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை வட்டாட்சியர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கண்ணகி தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட துணைத் தலைவர் பாண்டிமாதேவி பேசினார். கோரிக்கைகளாக முன்னாள் முதல்வர் 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்த காலமுறை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், 35 ஆண்டுகாலம் பணிபுரிந்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 7-ஆவது ஊதியக் குழுவில் அறிவித்த 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், அனைத்து பள்ளிகளும் மே மாத விடுமுறை விடுவது போல் விடுப்பு விட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட அங்கன் வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com