டிச.11-இல் மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்தும் பயிற்சி

மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் பயிர் பாதுகாப்பு உயிரியல் பொருள்கள் தயாரிப்பு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில்

மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் பயிர் பாதுகாப்பு உயிரியல் பொருள்கள் தயாரிப்பு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 இதுகுறித்து நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய திட்டத் தலைவர் என். அகிலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 11-ஆம் தேதி காலை 9 மணிக்கு பப்பாளி மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் பயிர் பாதுகாப்பு உயிரியல் பொருள்கள் தயாரிப்பு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
 இப்பயிற்சி முகாமில் தற்போது உள்ள தட்பவெப்ப சூழ்நிலையில், மரவள்ளியில், பப்பாளி மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிகமாகக் காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள், மாவுப்பூச்சிக்கு ஒட்டுண்ணி உற்பத்தி செய்யும் முறை மற்றும் பயிர் பாதுகாப்பு உயிரியல் பொருள்கள் தயாரிப்பு முறைகள் குறித்தும் விரிவாகப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
 இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ வரும் 10-ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் ஆதார் எண்ணை கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com