டிச.16-இல் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்

முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நாமக்கல்லில் வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது.

முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நாமக்கல்லில் வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது.
 இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் சி. த. பெரியகருப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 நாமக்கல் மாவட்டத்தில் 2017-2018-ஆம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பைக்கான தடகளம், நீச்சல் மற்றும் குழு போட்டிகள் இரு பாலருக்கும் வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது. 16, 17-ஆம் தேதிகளில் நாமக்கல் செல்வம் கலை, அறிவியல் கல்லூரியில் தடகளம் மற்றும் கால்பந்து போட்டிகள் நடைபெறும்.
 16-ஆம் தேதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நீச்சல் போட்டி, 17-ஆம் தேதி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடைப்பந்து போட்டி, 16-ஆம் தேதி லான்டென்னிஸ் போட்டி வகுரம்பட்டி எசிபி டென்னிஸ் அகாதெமியிலும், இறகுப்பந்து போட்டி ஆபிசர்ஸ் கிளப்பிலும், மேசைப்பந்து போட்டி விக்டோரியா ஹாலிலும் நடைபெறும். 16 மற்றும் 17 ஆம் தேதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி, கபாடி, வாலிபால் ஆகிய போட்டிகள் நடைபெறும்.
 இதில் 100, 800, 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், 110 மீட்டர் தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் ஆண்களுக்கு நடைபெறும்.
 100, 400, 3,000 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் பெண்களுக்கு நடைபெறும்.
 மேஜைப்பந்து, இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகள் இரண்டு ஒற்றையர் மற்றும் ஒரு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடைபெற உள்ளன.
 இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் வரும் 31ஆம் தேதி அன்று 21 வயதிற்குள்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். பிறந்த தேதிக்கான சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மாவட்ட அளவிலான குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழகத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் வசித்து வருவதற்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன் சமர்பிக்க வேண்டும்.
 குழு போட்டியில் பங்கேற்கும் அணிகள் வரும் 14-ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7401703492 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com