நல்லூர் கந்தம்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நல்லூர் கந்தம்பாளையத்தில் நெடுஞ்சாலைத் துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் முன்னிலையில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து 

நல்லூர் கந்தம்பாளையத்தில் நெடுஞ்சாலைத் துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் முன்னிலையில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து
கட்டப்பட்டிருந்த கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இடித்து அகற்றப்பட்டன.
 பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு வரை நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலையை அகலப்படுத்தும் பணி துவங்கி முடியும் தருவாயில் உள்ளது. சாலையின் இருபுறமும் இருந்த கடைகள், ஹோட்டல்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இடித்து அகற்றப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கந்தம்பாளையம் பகுதியில் மட்டும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் அகற்றும் பணியின் போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அகற்றப்படாமலும் அப் பகுதியில் சாலைகளை முழுமையாக முடிக்கப்படாமலும் இருந்தது.
 இந்த நிலையில், வியாழக்கிழமை நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாடு உதவிக் கோட்ட பொறியாளர் தாமரைச்செல்வி, உதவி பொறியாளர் உமேஷ், வருவாய்த் துறையினர் மற்றும் நல்லூர் போலீஸார் முன்னிலையில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட கட்டடங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். அப்போது வர்த்தக நிறுவனத்தினர் தானாகவே முன்வந்து ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருள்களை அகற்றிக் கொண்டதால் அப்பகுதியில் பதற்றம்ஏற்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com