பயறு வகைகள் குறித்து பண்ணைப் பள்ளி

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் , வெண்ணந்தூர் அருகேயுள்ள மூலக்காடு வருவாய் கிராமத்தில் ஒருங்கிணைந்த

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் , வெண்ணந்தூர் அருகேயுள்ள மூலக்காடு வருவாய் கிராமத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையின் மூலம் பயறுவகைகள் விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி நடத்தப்பட்டது.
 மத்திய, மாநில அரசுகளின் வேளாண் திட்டங்கள், பயறு வகைகள், வேளாண்மை குறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கு.சுந்தரவடிவேல், வேளாண்மை அலுவலர் மா.சௌந்தர்ராஜன், உதவி விதை அலுவலர் ரத்தினவேல், துணை வேளாண்மை அலுவலர் வ.பழனிவேல், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆரோக்கியசாமி, கருப்புசாமி, அந்தோணிசாமி, திருநாவுக்கரசு, அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் மா.இரமேஷ், கவிசங்கர், கலைசெல்வி உள்ளிட்டோர் பேசினர். விவசாயிகள் வெங்கடாசலம், கருப்பண்ணன், எம்.ஜி.ஆர். பழனியப்பன் ஆகியோர் பயறுகள் விதை பண்ணை அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com