மாணவர்களுக்கு பென்சில் ஓவியக்கலை அடிப்படை பயிற்சி
By ராசிபுரம், | Published on : 17th July 2017 09:46 AM | அ+அ அ- |
சிகரம் மழலையர், இளம்சிறார் அறிவகத்தின் சார்பில் சித்திரமும் கைப்பழக்கம் எனும் பென்சில் ஓவியக் கலைக்கான அடிப்படைப் பயிற்சி ராசிபுரம் அருகே குருசாமிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தச் சிறார் அறிவகம் சார்பில் இலவச பிரத்யேக நூலகத்தை ஏப்ரல்14 ஆம் தேதி சமூக ஆர்வலர்கள் 5 பேரால் தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பின் சார்பில் மாணவர்களின் திறன்களை வளர்க்கும் பொருட்டு மாதம்தோறும் மேம்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூன்றாம் நிகழ்வாக சித்திரமும் கைப்பழக்கம் எனும் பென்சில் ஓவியக்கலைக்கான அடிப்படைப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஓவியர் மூ.தமிழரசன் பங்கேற்று, பயிற்சி அளித்தார். பின்னர், 80 குழந்தைகளுக்கு ஓவியம் வரைவதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன. சிகரம் நிர்வாகிகள் செந்தில்ராஜா, மேகநாதன், செந்தில், சுதர்சன், சுரேந்தர், அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள் பாரதி, சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.-