காமராஜர் பிறந்த தின விழா கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் முதல்வர் 115ஆவது காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் 115ஆவது காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
 நாமக்கல் பொம்மைக்குட்டைமேட்டில் உள்ள காமராஜர் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காமராஜர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.நல்லதம்பி தலைமை வகித்தார். மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம், கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
 நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியை பள்ளியின் தாளாளர் எஸ்பிஎன். சரவணன் தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
 சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தலைமையாசிரியர் ப.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். உதவித் தலைமையாசிரியர் ப.முத்துசாமி வரவேற்றார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. உதவி தலைமையாசிரியை ரா.சாந்தி நன்றி கூறினார்.
 அப்துல்கலாம் நண்பர்கள் குழு: அப்துல்கலாம் நண்பர்கள் குழு, கற்றோர்கள் கலந்தாய்வு கழகம் சார்பில் காமராஜர் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து துண்டறிக்கை சேந்தமங்கலத்தில் சனிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.
 சேந்தமங்கலம் சின்னதேர் நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்வில் ஓய்வுபெற்ற ஆசிரியர் மருதநாயகம், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் தங்கராஜூ, திமுக கிளை பிரதிநிதி மோகன், கற்றோர்கள் கலந்தாய்வு கழகத் தலைவர் கர்ணன், டாக்டர் பாலாஜி ஆகியோர் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் காமராஜர் ஆட்சி கால சாதனைகள் குறித்த துண்டறிக்கைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.
 திருச்செங்கோட்டில்...
 காமராஜரின் பிறந்த நாளையொட்டி, நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கும், பழைய பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கும் நாமக்கல் மேற்கு மாவட்ட தமாகா தலைவர் செல்வகுமார் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
 இதையடுத்து, பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி கூட்டப்பள்ளி உள்ள நானாநானி உணவகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது. இதன்பின்னர், மாணவர்களுக்கு பரிசுகளும், நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
 நிகழ்ச்சிகளில் நகரத் தலைவர் தணிகைசெல்வன், மாவட்ட இலக்கிய அணித் தலைவர் பிரதீப்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திகேயன், மாவட்ட மாணவரணி தலைவர் காரத்திக், மாவட்டச் செயலர் லோகநாதன், மாநில தொழிற்சங்கச் செயற்குழு உறுப்பினர்முரளிராஜ், மாநில மாணவரணி செயலர் தீபக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com