சுயநிதி மழலையர், தொடக்கப் பள்ளிகளுக்கு அங்கீகாரச் சான்றிதழ்களை உடனே வழங்க வலியுறுத்தல்

அனைத்து சுயநிதி மழலையர்- தொடக்கப் பள்ளிகளுக்கும் பள்ளியின் அங்கீகாரச் சான்றிதழை (படிவம் 2) விரைவில் கிடைத்திட

அனைத்து சுயநிதி மழலையர்- தொடக்கப் பள்ளிகளுக்கும் பள்ளியின் அங்கீகாரச் சான்றிதழை (படிவம் 2) விரைவில் கிடைத்திட கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட சுயநிதி மழலையர்- தொடக்கப் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
 மாணவர்கள் நலன்கருதி பருவமுறை பாடத் திட்டத்தை மாற்றி ஆண்டுமுறை பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேர்வுகளை நிர்ணயிக்கும்போது விடுமுறைகளை சீராக அமைக்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் நிரந்தர அங்கீகாரம் வழங்கிட வேண்டும். இலவசக் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் குழந்தைகளுக்கு அரசின் உதவித்தொகையை அந்தந்த ஆண்டிலேயே பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். வாடகை கட்டடங்களில் இயங்கும் நர்சரி- பிரைமரி பள்ளிகளுக்கு கல்வி கட்டணத்தை அதிகளவில் நிர்ணயிக்க வேண்டும்.
 தனியார் சுய நிதிப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசுப் பணிகளில் சேருவதற்காக சங்கம் சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்துதல் என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 விழாவுக்கு மாவட்டத் துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் திருவின்மணாளன் வரவேற்றார். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் செல்வராஜ், சங்க நிறுவனர் சுப்பய்யன், மாநில இணைச் செயலர் ராஜேந்திரன், மாவட்டச் செயலர்கள் சீதாராமன் (சேலம்), சிவக்குமார் (நாமக்கல்) , ஈரோடு மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பேசினர்.
 விழாவையொட்டி, ஈஸ்வரி இளங்கோவன் மேற்பார்வையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com