ராசிபுரம் மாரியம்மன் கோயிலில் 10-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை

ராசிபுரம் ஸ்ரீநித்யசுமங்கலி மாரியம்மன் கோயிலில் 10-ம் ஆண்டு 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ராசிபுரம் ஸ்ரீநித்யசுமங்கலி மாரியம்மன் கோயிலில் 10-ம் ஆண்டு 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆண்டுதோறும் திரளான பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை இக் கோயிலில் நடத்தப்பட்டு வருகிறது. 10-ம் ஆண்டாக நடத்தப்பட்ட இந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.
 முன்னதாக காலை கோயிலில் லட்சுமி, கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபாலமுருகன் போன்ற சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. நித்யசுமங்கலி மாரியம்மனுக்கு பால், திருமஞ்சனம், திருநீர், தேன், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சர்வ அலங்காரம் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், பெண்களுக்கு தாலி பாக்கியம் நிலைக்கவும், திருமண பாக்கியம் கிடைக்கவும் இந்த திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com