ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு

ஆனி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெற்றன.

ஆனி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று இறைவனை வழிபட்டனர்.
 இக் கோயிலில் தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இதேபோன்று, ஆனி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், மஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனைத் திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றன.
 வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், நாமக்கல் மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com