பாவை வித்ய விநாயகர் கோயிலின் குடமுழுக்கு

பாவை கல்வி நிறுவனங்களின் ஓர் அங்கமான சேலம் அன்னதானப்பட்டி பாவை வித்யாஸ்ரம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்ரீபாவை வித்ய விநாயகர் கோயில் குடமுழுக்கு அண்மையில் நடைபெற்றது.

பாவை கல்வி நிறுவனங்களின் ஓர் அங்கமான சேலம் அன்னதானப்பட்டி பாவை வித்யாஸ்ரம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்ரீபாவை வித்ய விநாயகர் கோயில் குடமுழுக்கு அண்மையில் நடைபெற்றது.
 முன்னதாக கும்ப கலசத்துக்கும், ஸ்ரீபாவை வித்ய விநாயகர் விக்ரஹத்துக்கும் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கைநடராஜன் ஆகியோர் முன்னிலையில் பூஜைகள் நடைபெற்றன.
 அதைத் தொடர்ந்து கோயிலின் கருவறையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர், கோபுர விமானத்தின் மேல் கலசம் வைத்து சுவாமிக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. குடமுழுக்கு தீர்த்தம் அனைவருக்கும் வழங்கப்பட்டன. விழாவின்போது குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
 விழாவில், பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் (மாணவர் நலன்) அவந்திநடராஜன், தி ஆர்ட் பிரோ-சி.இ.ஓ., ராஜவேல், கல்வி நிறுவனத் துணைத் தலைவர் டி.ஆர்.மணிசேகரன், செயலாளர் டி.ஆர்.பழனிவேல், பொருளாளர் டாக்டர் எம். ராமகிருஷ்ணன், இணைச் செயலாளர் என்.பழனிவேல், இயக்குநர் (சேர்க்கை) கே.செந்தில், இயக்குனர் (நிர்வாகம்) முனைவர் கே.கே.ராமசாமி, இயக்குநர் (வித்யாஷ்ரம் பள்ளிகள்), சி.சதிஷ், பாவை வித்யாஷ்ரம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com