பிறருக்கென உழைப்பவர்கள் மக்களால் கொண்டாடப்படுவர்: திருச்சி தமிழ்ச் சங்க நிர்வாகி பேச்சு

பிறருக்கென உழைப்பவர்கள் மக்களால் நினைவில் வைத்துக் கொண்டாடப்படுவர் என திருச்சி தமிழ்ச் சங்க நிர்வாகி மாது பேசினார்.

பிறருக்கென உழைப்பவர்கள் மக்களால் நினைவில் வைத்துக் கொண்டாடப்படுவர் என திருச்சி தமிழ்ச் சங்க நிர்வாகி மாது பேசினார்.
 நாமக்கல் தமிழ்ச் சங்கத் தொடக்க விழா, விருது வழங்கும் விழா, பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நாமக்கலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் தமிழ்ச் சங்கத் தலைவர் மருத்துவர் ரா. குழந்தைவேல் தலைமை வகித்தார். மதிப்புறு தலைவர் வ.சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மா.தில்லை சிவக்குமார் வரவேற்றார்.
 அதைத் தொடர்ந்து பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. "மகாகவி' என்ற தலைப்பில் முனைவர் கோபால. நாராயணமூர்த்தி, "புரட்சிக்கவி' என்ற தலைப்பில் செல்வ. செந்தில்குமார், "காந்தியக்கவி' என்ற தலைப்பில் கோ. யுவராஜா, "திரைக்கவி' என்ற தலைப்பில் முனைவர் அனுராதா, "மக்கள் கவி' என்ற தலைப்பில் கவிஞர் உமாமகேஸ்வரி ஆகியோர் கவிதை வாசித்தனர். நிகழ்ச்சியில் நாமக்கல் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு மூத்த தமிழறிஞர் சிலம்பொலி சு. செல்லப்பன் நினைவுப் பரிசு வழங்கினார்.
 விழாவில் "தமிழர் கண்ட வாழ்வியல்' என்ற தலைப்பில் திருச்சி தமிழ்ச் சங்க நிர்வாகி
 மாது பேசியது:
 கிடைப்பதற்கு அரிய பிறவி மனிதப் பிறவியாகும். நாம் கற்கும் கல்வி, ஈட்டும் பொருள் அனைத்தும் இறைவன் கொடுத்தது எனக் கூறுபவர் ஞானி ஆவார். நமது முன்னோர்களைப் பற்றி பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. தான், தனது குடும்பம் என்றிருப்பவர்கள் சமுதாயத்தில் மறக்கப்படுவர்.
 ஆனால், பிறருக்கென உழைப்பவர்கள் மக்களால் நினைவில் வைத்துக் கொண்டாடப்படுவர்.மகாத்மா காந்தி, நேரு போன்றவர்கள் நாட்டுக்காக உழைத்தவர்கள் என்பதால் மக்கள் நினைவில் கொண்டாடப்படுகின்றனர் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com