விவசாய கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துவதே நிரந்தரத் தீர்வுகள்: கள் இயக்கம் நல்லசாமி

மத்திய அரசு விவசாய கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதே விவசாயிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு

மத்திய அரசு விவசாய கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதே விவசாயிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.
 தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 புது தில்லியில் விவசாயிகளின் போராட்டம் நியாயமான நோக்கத்துக்காக இருந்தாலும், அதன் வடிவம் மாறுபட்டு இருந்ததால், போராட்டம் வெற்றி பெறாமல் கொச்சைப்படுத்தப்பட்டு, பின்னடைவு ஏற்பட்டது.
 காவிரியிலிருந்து தமிழகத்துக்கு மாதாந்திர நீர் பங்கீட்டு முறையை காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி நடைமுறைப்படுத்த முடியாது. எனவே, கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் தினசரி நீர் பங்கீட்டு முறைக்கு தீர்ப்பைத் திருத்தி அமல்படுத்த வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு விவசாய கமிஷன் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கள் ஒரு போதை பொருள் அல்ல, உணவுப் பொருள். பிகார், கேரளத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட போதும் கள்ளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது போல், தமிழகத்திலும் கள்ளுக்கு தடை நீக்கி, விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com