ஜி.எஸ்.டி. வரியைக் கண்டித்து விசைத்தறிக் கூடங்கள் மூடல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள வெண்ணந்தூர் பகுதியில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையைக் கண்டித்து

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள வெண்ணந்தூர் பகுதியில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையைக் கண்டித்து திங்கள்கிழமை விசைத்தறிக் கூடங்களை மூடி விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
 வெண்ணந்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளான அத்தனூர், அலவாய்பட்டி, கொமாரபாளையம், ஒலைப்பட்டி, நடுப்பட்டி, மின்னக்கல், நாச்சிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இப் பகுதியில் முக்கியத் தொழிலான விசைத்தறித் தொழிலில் நேரடியாக 10 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 5 ஆயிரம் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
 இந் நிலையில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியைக் கண்டித்தும், விலக்கு அளிக்கக் கோரியும் வெண்ணந்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 600-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் மற்றும் 15 ஆயிரம் விசைத்தறிகளை மூடி 7 நாள் வேலைநிறுத்தப் போராட்டமும், ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, திங்கள்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதத்தில் விசைத்தறிக் கூடங்களை நிறுத்தி, விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com