ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், ராகுல் காந்தி பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், ராகுல் காந்தி பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
 விழாவுக்கு மாவட்டத் தலைவர் கே.எம்.ஷேக் நவீத் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ரா.செழியன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 விழாவை முன்னிட்டு அன்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. மேலும், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
 இந்நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.ஏ.சித்திக், மாவட்ட பொதுச் செயலர் குமரன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வீரப்பன், பரமசிவம், சண்முகம், பாண்டியன், விவசாய அணி மாவட்டத் தலைவர் ஆர்.மெய்ஞான மூர்த்தி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 ராசிபுரத்தில்...
 ராசிபுரம் காந்தி மாளிகையில் கேக் வெட்டி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி, உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தினர். மேலும், கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு ஒற்றுமையுடன் வழிநடத்துவோம், தீவிர உறுப்பினர் சேர்ப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
 பின்னர் ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு இனிப்புகள், சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
 இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.முரளி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாச்சல் ஏ.சீனிவாசன் வரவேற்றார். மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் செழியன், மாவட்ட சேவா தள தலைவர் விநாயகமூர்த்தி, மாவட்டச் செயலர் எஸ்.தாஜ்முகமது, நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.ஷேக்நவீத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பேசினார்.
 குமாரபாளையத்தில்...
 காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாள் மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கனின் 108-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
 நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். முன்னாள் நகரத் தலைவர் மோகன் வெங்கட்ராமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் பி.டி.தனகோபால் பங்கேற்றார்.
 நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு இனிப்புகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நகர நிர்வாகிகள் சிவகுமார், காளியப்பன், செல்வராஜ், மனோகரன், சிவராஜ், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com