வெளிநாட்டில் தவிக்கும் கணவரை மீட்டுத் தர கோரிக்கை

பணி அளித்தவர் கடவுச்சீட்டை பறித்துக் கொண்டதால், நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் கணவரை மீட்டுத்தர வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

பணி அளித்தவர் கடவுச்சீட்டை பறித்துக் கொண்டதால், நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் கணவரை மீட்டுத்தர வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
 நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், பிள்ளாநத்தம் மூணாம் பள்ளிக்காட்டு வலவைச் சேர்ந்த சகுந்தலா (34), நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு: நாமக்கல் மாவட்டம், களங்காணியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் வண்டி, தென்னாப்பிரிக்கா நாட்டில் கானாவில் இயங்கி வருகிறது. அதில் என் கணவர் ராஜேந்திரன் ரிக் டிரில்லராக பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு, கடந்த பிப்ரவரியில் அழைத்துச் சென்றனர்.
 அங்கு சென்றவுடன் என் கணவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், என் கணவருக்கும், ரிக் வண்டி உரிமையாளருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, என் கணவரின் கடவுச் சீட்டு போன்ற ஆவணங்களை பறித்துக் கொண்டதுடன், பணம் தராமல் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றினர். கையில் பணம் இல்லாமல், சாப்பிட வழியின்றி கானா நாட்டில் அவர் தவித்துக் கொண்டிருக்கிறார்.
 மேலும், எனது கணவரை கொன்று விடுவேன் என மிரட்டுகின்றனர். எனக்கு பிளஸ் 2 படிக்கும் ஒரு மகனும், எஸ்எஸ்எல்சி படிக்கும் மகளும் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவத்தின் மீது நடவடிக்கை எடுப்பதுடன், வெளிநாட்டில் தவிக்கும் என் கணவரை பாதுகாப்புடன் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com