இ-சேவை மையங்களில் ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

பொது இ-சேவை மையங்களில் ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது இ-சேவை மையங்களில் ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: நாமக்கல் மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் பணி கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இப்போது வரை நாமக்கல் மாவட்டத்துக்கு 2,94,919 ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வரப்பெற்று, 2,57,966 அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகங்களில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் இயங்கும் அரசு பொது இ-சேவை மையங்களில் ஸ்மார்ட் குடும்ப அட்டை தொடர்பான சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.
இதன்படி, புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் பதிவேற்றம் செய்தல், ஸ்மார்ட் குடும்ப அட்டையில் திருத்தம், புதிதாக பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் மாற்றம் ஆகிய சேவைகளும் அரசு பொது இசேவை மையங்கள் மூலம் செய்யப்படுகிறது.
இந்த சேவைகளுக்கு சேவைக் கட்டணமாக ரூ.60 மட்டும் பெறப்படுகிறது. மேலும் பிழைகள் திருத்தம் செய்யப்பட்ட ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை ரூ.30 சேவைக் கட்டணமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் இந்த சேவைகளுக்காக வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள அரசு பொது இ-சேவை மையங்களை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com