சமுதாய பாலிடெக்னிக் கல்லூரி சான்றிதழ் வழங்கும் விழா

ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையின் மூலம் கிராமப்புற மக்களின்

ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையின் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு இலவச பயிற்சிகளான தையல், கணினி, கூடை பின்னுதல், பொம்மை தயாரித்தல், யோகா, ஓயர் மேன் போன்ற பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதில், கடந்தாண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் ஆர்.இராமசாமி, செயலர் ஆர்.ஜெயபிரகாஷ், பொருளர் ஆர்.பிரேம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பின்னர் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில், சமுதாய பாலிடெக்னிக் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் பி.குணசேகரன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் முதல்வரும், திட்டத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான ஜி.விஜயகுமார் இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் செயல்பாடு குறித்தும் எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் தாளாளர் ஆர்.ராமசாமி பேசும் போது, கிராமப்புறத்தில் இருக்கக் கூடிய பெண்கள் குடும்ப பொறுப்புகளோடு சேர்த்து வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வதற்கு உங்கள் ஊரிலேயே மத்திய மற்றும் மாநில அரசுகளால் எங்களது கல்லூரி மூலமாக பல்வேறு விதமான இலவச பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். திட்ட ஆலோசகர் கமலநாதன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com