பரமத்திவேலூர் சந்தைகளில் ஆடு, கோழிகள் விற்பனை அதிகரிப்பு

நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயில் தீ மிதித் திருவிழாவையொட்டி பரமத்தி வேலூர் ஆடு, கோழிகள் சந்தைகளில் ஞாயிற்றுக்கிழமை விற்பனை அதிகரித்தது.

நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயில் தீ மிதித் திருவிழாவையொட்டி பரமத்தி வேலூர் ஆடு, கோழிகள் சந்தைகளில் ஞாயிற்றுக்கிழமை விற்பனை அதிகரித்தது.
 நன்செய் இடையாறில் மிகவும் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோயில் உள்ளது. நிகழாண்டு இக்கோயிலில் அக்னி குண்டம் இறங்கும் நிகழ்த்சி திங்கள்கிழமையும், அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெறும் கிடா வெட்டும் நிகழ்ச்சிக்காக பரமத்தி வேலூர் ஆட்டுச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விற்பனை அதிகரித்தது.
 இந்தச் சந்தைக்கு கர்நாடக மாநிலத்திலிருந்தும், சேலம்,கரூர், நாமக்கல், ஈரோடு, பாளையம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர்.
 இதில் ரூ. 3 ஆயிரத்தில் இருந்து ரூ. 13 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது. விலை அதிகமாக இருந்தாலும் திருவிழாவைக் கொண்டாடுவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் விலை கொடுத்து ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
 இதேபோல் நாட்டுக்கோழி ஏலச் சந்தைக்கு நாமக்கல், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவடங்களில் இருந்து பல்வேறு வகையான ஏராளமான நாட்டுக்கோழிகள் கொண்டு வரப்பட்டிருந்தன. ரூ. 350 முதல் ரூ. 500 வரையில் நாட்டுக்கோழிகள் விற்பனையானது. வேலூரிலிருந்து மோகனூர் செல்லும் சாலை, நாமக்கல்லில் இருந்து வேலூர் பேருந்து நிலையம் செல்லும் சாலையில் இந்த இரு சந்தைகள் நடைபெற்றன. ஆடு, கோழிகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் காலை சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com