மார்ச் 29இல் நாமக்கல்லில் யுகாதி விழா

நாமக்கல்லில் யுகாதி விழா வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நாமக்கல்லில் யுகாதி விழா வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 இதுகுறித்து நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச் சங்கத் தலைவர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் செயலர் ஜெய.வேங்கடசுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் யுகாதி என்ற தெலுங்கு புத்தாண்டு பிறப்பு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு வரும் 29ஆம் தேதி நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள சுப்புலட்சுமி மஹாலில் காலை 8.30 மணி முதல் யுகாதி திருவிழா நடைபெறுகிறது.
 விழாவில் முதல் நிகழ்ச்சியாக மணமாலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந் நிகழ்ச்சியில் சுமார் 700 மணமக்கள் கலந்துகொள்ள ஜாதகங்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சி மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. மதியம் 3 மணி முதல் குழந்தைகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 இதில் ஓவியப் போட்டி, மாறுவேடப் போட்டி, பாட்டுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. மகளிருக்கான கயிறு இழுக்கும் போட்டி மற்றும் கோலப் போட்டி ஆகியவை நடைபெறுகின்றன.
 இதனைத் தொடர்ந்து கடந்த 2016ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு மற்றும் சிறந்த சாதனையாளர்களுக்கான விருது வழங்கப்படுகிறது.
 விழாவின் முடிவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்குகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com