அனுமதி இன்றி இயங்கும் சாயப்பட்டறைகளை அகற்றாவிட்டால் உரிமையாளர்களுக்கு சிறை

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் அனுமதி பெறாமல்  செயல்படும் சாயப்பட்டறைகளை வரும் 26-ஆம் தேதிக்குள் அகற்றாவிட்டால்

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் அனுமதி பெறாமல்  செயல்படும் சாயப்பட்டறைகளை வரும் 26-ஆம் தேதிக்குள் அகற்றாவிட்டால் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் கீர்த்தி பிரியதர்சினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனுமதி பெறாமல் செயல்படும் சாயப்பட்டறைகளால் வெளியேற்றப்படும் சாயக் கழிவுகள் காவிரி ஆற்றில் கலக்கப்படுகிறது. இதனால் ஆற்றுநீரைக் குடிநீராகப் பயன்படுத்த முடிவதில்லை. நிலத்தடி நீரும் நிறம் மாறி குடிக்க முடியாதவாறு உள்ளது. சாயக் கழிவுகளால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
சாயப்பட்டறைகளுக்கு அவ்வப்போது சீல் வைக்கப்பட்டும், இடிக்கப்பட்டும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் நிலையில் அனுமதி இன்றி சாயப்பட்டறைகள் செயல்படுவதாக தொடர் புகார்கள் வந்தன.
இதன் பேரில் சாயப்பட்டறை உரிமையாளர்கள் மற்றும் சாயப்பட்டறைகளுக்கு நிலம் அளித்தவர்களை அழைத்து கோட்டாட்சியர் கீர்த்திபிரியதர்சினி வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வரும் 26-ஆம் தேதிக்குள் அனுமதியின்றி செயல்படும் அனைத்து சாயப்பட்டறைகளையும் அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு 6 மாத சிறைத் தண்டனையும், ரூ 1,000 அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com