குமாரபாளையத்தில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி

ஜல்லிக்கட்டுப் போட்டி முதல் முறையாக குமாரபாளையத்தை அடுத்த வளையக்காரனூரில் சனிக்கிழமை (மே 20) நடைபெறுகிறது. இதற்கான

ஜல்லிக்கட்டுப் போட்டி முதல் முறையாக குமாரபாளையத்தை அடுத்த வளையக்காரனூரில் சனிக்கிழமை (மே 20) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
அனைத்து பொதுநல அமைப்புகளுடன் இணைந்து நம்ம குமாரபாளையம்  அமைப்பினர் ஜல்லிக்கட்டு விழாவை அரசின் விதிகளுக்கு உள்பட்டு குமாரபாளையத்தில் நடத்திட அனுமதி கோரியிருந்தனர். இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து குமாரபாளையம் வளையக்காரனூரில் எஸ்எஸ்எம் கல்லூரிக்கு பின்புற மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், அலுவலர்கள் பார்வையிட்டனர். இப்போட்டியில் பங்கேற்க 200 காளைகள் வந்துள்ளன. திருச்செங்கோடு கோட்டாட்சியர் ஆர்.கீர்த்தி பிரியதர்ஷினி, காவல் துணை கண்காணிப்பாளர் வி.ராஜு, குமாரபாளையம் வட்டாட்சியர் ரகுநாதன் உள்ளிட்ட துறைசார் அலுவலர்கள் ஆய்வின்போது உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com