நாமக்கல் மாவட்டத்தில் 49 அரசுப் பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வில் நிகழாண்டு 49 அரசுப் பள்ளிகள் உள்பட 157 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வில் நிகழாண்டு 49 அரசுப் பள்ளிகள் உள்பட 157 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில்
நிகழாண்டு 23,433 மாணவ, மாணவிகள் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதினர். இதில் 22,623 பேர் தேர்ச்சி பெற்றனர். 49 அரசுப் பள்ளிகள் உள்பட 157 பள்ளிகள் நிகழாண்டு நூறு சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசுப் பள்ளிகள் விவரம்: தண்ணீர்பந்தல்பாளையம், பாச்சல், சேந்தமங்கலம் (ஆண்கள்), பாண்டமங்கலம் (பெண்கள்), அலங்காநத்தம், பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம், விட்டம்பாளையம், வரகூர், பெரியமணலி, திருமலைப்பட்டி, பழையபாளையம், கபிலர்மலை, காரைக்குறிச்சிபுதூர், செல்லப்பம்பட்டி, உடையார்பாளையம், ராமாபுரம் (மாதிரிபள்ளி), மணலிஜேடர்பாளையம் டி.பி.பி. உயர்நிலைப்பள்ளி என 18 அரசு மேல்நிலை பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
இதேபோல் இ.புதுப்பாளையம், கலியனூர், கோட்டபாளையம், வில்லிபாளையம், தளிகை, தொட்டிப்பட்டி, ராமநாதபுரம்புதூர், பட்லூர், பொம்மம்பட்டி, கொந்தளம், சப்பையாபுரம், வெடியரசம்பாளையம், ஜம்புமடை, அய்யம்பாளையம், மொளசி, வேமன்காட்டுவலசு, செட்டியம்பாளையம், நஞ்சப்பா கவுண்டம்பாளையம், நத்துகுழிப்பட்டி, கொண்டரசம்பாளையம், குப்பாண்டபாளையம், பெரியப்பட்டி, மின்னக்கல், நெம்பர்.3 கொமாரபாளையம், படைவீடு, இலுப்புலி, கூனவேலம்பட்டிபுதூர், சிங்கிலியன்கோம்பை, மாம்பாளையம், ஒருவந்தூர்புதூர், குமாரபாளையம் நகரவை பள்ளி என 31 அரசு உயர்நிலைப் பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் 42 அரசுப் பள்ளிகள் உள்பட 146 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் சிறப்பிடம்: நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 56 பேர் தேர்வு எழுதியிருந்தனர். அதில், கண் பார்வையற்றோர் பிரிவில் 2 பேரில் ஒருவரும், காது கேளாத, வாய் பேசாதோர் பிரிவில் 13 பேரில் 8 பேரும், உடல் ஊனமுற்றோர் பிரிவில் 21 பேரில் 19 பேரும், பிற வகை மாற்றுத்திறனாளிகள் 20 பேரில் 17 பேரும் மொத்தம் 45 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com