ராஜா வாய்க்கால் தூர்வாரும் பணி: எம்எல்ஏ துவக்கி வைத்தார்

பரமத்தி வேலூரில் ராஜா வாய்க்கால் தூர்வாரும் பணியை பரமத்தி வேலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.

பரமத்தி வேலூரில் ராஜா வாய்க்கால் தூர்வாரும் பணியை பரமத்தி வேலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.
பரமத்தி வேலூர் அருகே நன்செய் இடையாறு வாஞ்சிபிள்ளையார் கோயில் பகுதியில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ராஜா வாய்க்கால் உள்ளது.
இந்த வாய்க்காலைத் தூர் வருவது குறித்து முறையாக பொதுப்பணித் துறையினரிடம் திமுகவினர் அனுமதி பெற்றிருந்தனர்.
இதையடுத்து தூர்வாரும் பணியை திமுகவினர் தொடக்கினர். இதில் வாஞ்சி பிள்ளையார் கோயில் பகுதியில் இருந்து நன்செய் இடையாறு அலகுநாச்சியம்மன் கோயில் வரை உள்ள வாய்க்காலை தூர்வாரும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது. இந்தப் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி துவக்கி வைத்தார்.
கபிலர்மலை தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் டாக்டர் கே.நெடுஞ்செழியன், நன்செய் இடையாறு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செந்தில்குமார், 17 ஊர் விவசாயிகள் சங்கத் தலைவர் மாயாண்டிக்கண்டர் உள்பட விவசாயிகள் சங்கத்தினர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com