நாமக்கல் மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம்: மே 29 இல் துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் தீர்வாயம்(ஜமாபந்தி) அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வரும் 29 ஆம் தேதி தொடங்குகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் தீர்வாயம்(ஜமாபந்தி) அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வரும் 29 ஆம் தேதி தொடங்குகிறது.   கொல்லிமலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் வருவாய்த் தீர்வாயம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தி: நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, கொல்லிமலை, குமாரபாளையம், சேந்தமங்கலம் ஆகிய 7 வருவாய் வட்டங்களிலும் வருவாய் தீர்வாயம் வரும் 29 ஆம் தேதி தொடங்குகிறது.
கொல்லிமலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் முதல் நாளான 29 ஆம் தேதி சித்தூர்நாடு, பெரக்கரைநாடு, பைல்நாடு மற்றும் திருப்புளி நாடு ஆகிய 4 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், 30ஆம் தேதி குண்டனிநாடு, அடக்கம் புதுக்கோம்பை, எடப்புளிநாடு, ஆலத்தூர் நாடு, பெலாப்பாடி நாடு ஆகிய 5 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், 31 ஆம் தேதி ஆரியூர் நாடு, குண்டூர் நாடு, வளப்பூர் நாடு ஆகிய 3 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், ஜூன் 1 ஆம் தேதி திண்ணணூர் நாடு, சேளுர் நாடு, தேவனூர் நாடு, வாழவந்தி நாடு ஆகிய 4 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் கோரிக்கை மனுக்களை வருவாய்த் தீர்வாய அலுவலரான ஆட்சியரிடம் நேரில் அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com