குப்பை கொட்ட எதிர்ப்பு: லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

நாமக்கல் அருகே குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் அருகே குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் அருகே கணவாய்ப்பட்டி மேட்டில் இருந்து வகுரம்பட்டி கிராமத்துக்குச் செல்லும் குடிநீர்க் குழாய் அருகே சாலையின் ஓரத்தில் அடிக்கடி சிலர் குப்பைகளைக் கொட்டி செல்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை நாமக்கல்லில் இருந்து லாரி  குப்பையை ஏற்றிச் சென்று, வகுரம்பட்டி செல்லும் சாலையின் ஓரத்தில் கொட்டிவிட்டுச் சென்றுள்ளது. பின்னர் மீண்டும் குப்பைகளைக் கொட்ட, அந்த லாரி வந்துள்ளது.
 இதுகுறித்து தகவல் அறிந்த வகுரம்பட்டி பொதுமக்கள் அந்த லாரியை சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு குப்பைகளை கொட்டி செல்வதால் தங்கள் பகுதிக்கு வரும் குடிநீர் மாசடைவதோடு ,அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் மருத்துவ கழிவு பொருள்களும் அங்கு கொட்டப்படுவதாக அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், பொக்லைன் இயந்திரம் மூலம் ஏற்கெனவே கொட்டப்பட்டிருந்த குப்பைகள்
அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com