குமாரபாளையத்தில் மலிவு விலை மருந்து விற்பனையகம் திறப்பு

குமாரபாளையத்தில் மத்திய அரசின் திட்டமான ஜன் ஒளஷதி எனப்படும் மலிவு விலை மருந்து விற்பனையகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

குமாரபாளையத்தில் மத்திய அரசின் திட்டமான ஜன் ஒளஷதி எனப்படும் மலிவு விலை மருந்து விற்பனையகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு  ஜேகேகே நடராஜா கல்வி நிறுவனங்களின் செயலர் என்.செந்தாமரை தலைமை வகித்து மருந்தகத்தைத் திறந்து வைத்தார். நிர்வாக இயக்குநர் எஸ்.ஓம் சரவணா, முன்னாள் நகர்மன்றத் தலைவர் எஸ்.சேகர், குமாரபாளையம் காவல் ஆய்வாளர் சி.வேலுத்தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல் விற்பனையை திமுக தலைமை சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஜேகேஎஸ்.மாணிக்கம் தொடக்கி வைத்தார். ஜேகேகே நடராஜா மருந்தியல் கல்லூரியால் நிர்வகிக்கப்படும் இம்மருந்தகத்தில் 700 வகையான மருந்து, மாத்திரைகள் மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். சர்க்கரை, ரத்த அழுத்தம், இதயம், வயிறு தொடர்பான அனைத்து நோய்களுக்கும் வைட்டமின், நோய் எதிர்ப்பு மாத்திரைகளும் கிடைக்கும்.
மேலும், அறுவை சிகிச்சை உபகரணங்களும் குறைந்த விலையில் கிடைக்கும். விரைவில் ரத்தப் பரிசோதனை மையமும் திறக்கப்பட்டு குறைந்த விலையில் சேவைகள் அளிக்கப்பட உள்ளன. ஜேகேகே நடராஜா பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஏ.சிவக்குமார், மருந்தியல் கல்லூரி முதல்வர் ஆர்.சம்பத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com