கொல்லிமலையில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்: 3 பேர் கைது

கொல்லிமலையில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து 20 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொல்லிமலையில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து 20 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல் மாவட்டம்,  கொல்லிமலை தென்கரைப் பகுதியில் இரவு நேரங்களில் சந்தன மரம் வெட்டி கடத்தப்படுவதாக வாழவந்திநாடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து,  எஸ்.ஐ. கங்காதரன் தலைமையிலான போலீஸார் பைல்நாடு அருகே கல்லாக்குத்தி பிடாரி அம்மன் கோயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது,  3 இளைஞர்கள் 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர்.  போலீஸாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அவர்கள் வேகமாகச் சென்றனர்.  அந்த 3 பேரையும் போலீஸார் விரட்டிச் சென்று பிடித்தனர்.  அவர்களிடம், 20 கிலோ சந்தனக் கட்டைகள் இருந்தது தெரியவந்தது.
போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் 3 பேரும் பெரக்கரை நாடு  வடகாடு பகுதியைச் சேர்ந்த ராஜூ (29),   மதி (26),  சரவணன் (32) என்பதும், இவர்கள் பைல்நாடு அருகே எடப்புக்காடு,  ஏணிக்கல் காப்புக் காட்டில் 30-க்கும் மேற்பட்ட சந்தன மரக்கன்றுகளை வெட்டி,  அதில் இருந்து 20 கிலோ சந்தனக் கட்டைகளை எடுத்து வந்ததும் தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீஸார்,  3 பேரையும் கொல்லிமலை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.  பிடிட்ட மூவரையும் கைது செய்த வனத் துறையினர், அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com