சென்னையில் ஐ.நா. சபை மாநாட்டில் எஸ்.பி.கே. பள்ளி மாணவர்கள் கருத்துரை

சென்னையில் உள்ள சர்வதேச அமெரிக்கன் பள்ளியில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை மூன்று நாள்கள் சர்வதேச ஐக்கிய நாடுகள் சபை மாநாடு நடைபெற்றது.

சென்னையில் உள்ள சர்வதேச அமெரிக்கன் பள்ளியில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை மூன்று நாள்கள் சர்வதேச ஐக்கிய நாடுகள் சபை மாநாடு நடைபெற்றது.
இம் மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருக்கும் 75 நாடுகளின் பிரதிநிதிகளாக 480 மாணவர்கள் பங்கேற்றனர்.
சிங்கப்பூர்,சூடான், கத்தார், அமெரிக்கா, ஜப்பான் அரபு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளின் மாணவர்களும் பங்கேற்றனர். இம்மாநாட்டில் இந்தியாவில் இருந்து 28 பள்ளிகள் பங்கேற்றன.
ஐ.சி.எஸ்.இ, சி.பி.எஸ்.இ மற்றும் பல்வேறு சர்வதேச பள்ளிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் பங்கேற்றது. தமிழகத்தில்  எஸ்.பி.கே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மட்டுமே இதில் பங்கேற்றது.
இப் பள்ளி சார்பில் எட்டு மாணவிகளும், இரண்டு மாணவர்களும் மற்றும்  இரண்டு ஆசிரியர்களும் பங்கேற்றனர்
மாநாட்டில் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்குகளில் மாணவர்கள் விவாதித்து, தமது கருத்துகளை வெளிப்படுத்தினர். மனித உரிமைகள் உலக அமைதி, சர்வதேச சட்டங்கள், சர்வதேச நீதிமன்றம், சுற்றுச்சூழல் மேம்பாடு, அகதிகளின் கடத்தல்களைத் தடுப்பது, வெனிசுலா நாட்டின் பொருளாதாரச் சீர்கேடுகளைகளையும் வழிகள், பாலினப் பொருளாதாரக் காரணிகள் போன்ற பல்வேறு வகையான சர்வேதச அளவில் நிகழும் தற்காலப் பிரச்னைகளின் சிக்கல்களும் தீர்வுகளும் விவாதிக்கப்பட்டன.
மாநாட்டில், எஸ்.பி.கே மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கொண்டுவந்த சிறப்புத் தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டன. பின்னர், அவைகள் ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
 மாநாட்டில் பங்கேற்ற மாணவர்களையும் ஆசிரியர்களையும் எஸ்.பி.கே ஜெம்ஸ் பள்ளிகளின் தாளாளர்.பி.செங்கோடன், தலைவர் டாக்டர்.ஏ.எஸ்.பிரபு ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com