கொப்பரைத் தேங்காய் விலை சரிவு

பரமத்திவேலூர் சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரைத் தேங்காய் குறைந்த விலைக்கு ஏலம் போனது.

பரமத்திவேலூர் சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரைத் தேங்காய் குறைந்த விலைக்கு ஏலம் போனது.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 4 ஆயிரத்து 243 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.110-க்கும், குறைந்த பட்சமாக ரூ.100.55 -க்கும், சராசரியாக ரூ.108-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 4 லட்சத்து 18 ஆயிரத்து 292-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
நிகழ் வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 3 ஆயிரத்து 190 கிலோ கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.109.10 -க்கும்,  குறைந்தபட்சமாக ரூ. 101.59 -க்கும், சராசரியாக ரூ. 106.60-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 3 லட்சத்து 4 ஆயிரத்து 61-க்கு வர்த்தகம் நடைபெற்றது. விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com